என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நில நடுக்கம்
நீங்கள் தேடியது "நில நடுக்கம்"
பாகிஸ்தானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. #Pakistan #Earthquake
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இஸ்லாமாபாத், பெஷாவர், சுவாட், புனிர், சாங்கலா, மலாகண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நில நடுக்கம் தொடர்பாக டுவிட்டரில் மக்கள் பதிவுகள் வெளியிட்டனர். #Pakistan #Earthquake

பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Fiji #TSunami
சிட்னி:
பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுமார் 24 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பிஜி, வானட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 1 மீட்டர் உயரத்திலான அலைகள் வீசலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக பேரிடர் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
×

X